இலங்கையில் 1505 ஆம் ஆண்டு கால்பதித்து ஆக்கிரமிக்க முற்பட்ட அந்நிய நாட்டவரான போர்த்துக்கேயரை வீரத்துடன் எதிர்கொண்ட மாவீரன் யாழ்ப்பாணத் தமிழ் அரசின் தலை சிறந்த மன்னன் சங்கிலியன் ஆவான்..
யாழ்ப்பாணத்தை ஆண்டமன்னா்களுள் மிகவும் தலை சிறந்தவன் சங்கிலிய மன்னன் அம்மன்னனின் பெருமைகள் என்றென்றும் அழியாமலே வாழும். அவன் வாழ்ந்த அரண்மனையும் அதன் கல்வெட்டுகளும் இன்றும் நம் மண்ணிலே அடையாளங்களாக உள்ளது.
யமுனா ஏரி : யமுனா ஏரி யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்த நல்லூரிலுள்ள பகர வடிவில் அமைந்த ஒரு கேணி ஆகும். இது யாழ்ப்பாணத்தைக் கடைசியாக ஆண்ட சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பு வளவில் உள்ளது. யாழ்ப்பாண வைபவமாலையின்படி இது யாழ்ப்பாண அரசின் முதல் அரசனாகக் கருதப்படும் கூழங்கை சக்கரவர்த்தியின் காலத்தில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது