தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள்: என்ன விலை தெரியுமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, March 19, 2019

தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள்: என்ன விலை தெரியுமா?

16-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட வெள்ளி மற்றும் தங்கம் பூசப்பட்ட அலங்கார கப்பல்களை அதன் உரிமையாளரின் வாரிசுகளிடம் அருங்காட்சியகத்தின் நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.
குறித்த கப்பல்களை ஜேர்மனியை சேர்ந்த கைவினை கலைஞர் ஜார்ஜ் முல்லர் கடந்த 1630-ஆம் ஆண்டில் உருவாக்கினார்.
இதன் மதிப்பு €130,000 ஆகும். ஒரு தொழிலதிபர் மூலம் இரண்டு கப்பல்களும் கடந்த 1967-ஆம் சுவிட்சர்லாந்தில் உள்ள St Gallen அருங்காட்சியத்துக்கு வந்தடைந்தது.
இதன் உரிமையாளரின் வாரிசுகள் எங்கு உள்ளனர் என அருங்காட்சியகம் சார்பில் கடந்த 2010-லிருந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அது குறித்த முழு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த கோடீஸ்வர பெண்ணான இம்மா பட்ஜ் என்பவர் தான் வெள்ளி மற்றும் தங்கம் பூசப்பட்ட அலங்கார கப்பல்களுக்கு உரிமையாளராவார்.
இம்மா கடந்த 1937-ல் உயிரிழந்தார். பின்னர் அவர் குடும்பத்தாரை நாஜி ஆட்சியாளர்கள் மிரட்டி இரண்டு கப்பல்களையும் வலுக்காட்டாயமாக விற்க வைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.


தற்போது இம்மா பட்ஜ் வாரிசுகளை கண்டுபிடித்துள்ள St Gallen அருங்காட்சியகத்தின் நிர்வாகம் இரண்டு கப்பல்களையும் அவர்களிடம் ஒப்படைத்துள்ளது.