ராகு - கேது தோசம் நீங்க வேண்டுமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 23, 2019

ராகு - கேது தோசம் நீங்க வேண்டுமா?

ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள் என்று சொல்லப்படுகின்றது.

வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 நேற்றைய தினம் ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர்.

திருக்கணிதப்படி மார்ச் 6ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது.

அந்தவகையில் ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி இங்கு பார்ப்போம்.
ராகு தோஷம்
ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் எதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமை அன்றும், ராகு தசை மற்றும் ராகு புக்தி காலத்திலும் விரதம் இருக்க வேண்டும்.
ராகு பகவானுக்கு ராகு காலத்தில் மந்தாரை மலரால் அர்ச்சனை செய்து உளுந்தால் செய்யப்பட்ட பலகாரத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
பின் ராகு காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும். அதோடு ராகு காலத்தில் துர்கை அம்மனையும் வழிபட்டு வந்தால் ராகு தோஷம் நீங்கும்.
கேது தோஷம்
ஒருவரது ஜாதகத்தில் கேதுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட திங்கட்கிழமை அன்றும், கேது தசை மற்றும் கேது புக்தி காலத்திலும் விரதம் இருப்பது அவசியம்.
கேது பகவானுக்கு பல வகை மலர் கொண்டு அர்ச்சனை செய்து, சித்ரான்னம் நைவேத்தியம் செய்து, கேது காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜெபித்து வர வேண்டும்.
அதோடு விநாயகப்பெருமானையும் தொடர்ந்து வழிபட்டு வர கேது தோஷம் விலகும்.

ஆன்மீகம்