கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினை தொடர்ந்து ஒரு மாதத்தின் பின்னர் கூகுள் நிறுவனம் வெள்ள அபாயங்கள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அல்லது தகவல் தெரிவிக்கும் சேவை ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் முனைப்புடன் செயற்பட்ட வந்தது.
இதனைத் தொடர்ந்து இதற்கான பைலட் திட்டத்தினை செப்டெம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் தொடங்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது டெக்ஸ் வடிவிலான எச்சரிக்கையினை வழங்குவதற்கு முழுமையாக கூகுள் நிறுவனம் தயாராகியுள்ளது.
எனினும் இச் சேவை முதன் முறையாக இந்தியாவில் மாத்திரமே அறிமுகமாகின்றது.
இந்தியாவின் எப்பகுதியில் வெள்ளம் ஏற்படினும் அங்குள்ள மக்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை, முன்னறிவித்தல் விடுக்கப்படும்.
இவ் வசதி படிப்படியாக ஏனைய நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.