நாம் அனைவரும் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம் இது; சூர்யா அதிரடி பேச்சு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 14, 2019

நாம் அனைவரும் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம் இது; சூர்யா அதிரடி பேச்சு


நாம் அமைதியாக எம்மீது திணிப்புக்கள் தொடரும், எனவே நாம் அனைவரும் விழித்துக்கொள்ளவேண்டும் என்று நடிகரும் சமூக ஆர்வலருமான சூர்யாaஆக்ரோசமாக பேசியுள்ளார், 

 சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்வழங்கப்படும் நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றபோது நடிகர் சூர்யா பேசியதாவது.

 “புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது 

அதேபோல குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்திருப்பது சரியல்ல. அந்தப் பள்ளிகளை தரம் உயர்த்தாமல் பள்ளிகளை மூடினால் கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நுழைவுத்தேர்வு நடத்துவது ஏன்?

அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு நம்மீது திணிக்கப்படும். கல்வி முறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டும். புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து அனைவரும் தங்களது கருத்தினை தெரிவிக்க வேண்டும்.

ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்கக் கூடாது. மாணவர்களால் அதை படிக்க முடியாது. மேலும் புதிய கல்விக்கொள்கையில் 5ஆம் வகுப்பில் அரசுத் தேர்வு என்று பரிந்துரைத்துள்ளனர். அப்படி செய்தால் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கும். யாரும் படிக்க மாட்டார்கள்.

ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் மாணவர்கள் எப்படி நீட் உள்ளிட்ட தேர்வுகளை எழுத முடியும். அதிகளவில் தேர்வுகளை மாணவர்கள் மீது திணிக்கக்கூடாது. நீட் தேர்வால் பயிற்சி மையங்கள்தான் அதிகரிக்கும். நீட் தேர்வு பயிற்சி மையங்களின் தற்போதைய ஆண்டு வருமானம் ரூ.5000 கோடி. எதிர்காலத்தில் தேர்வு பயிற்சி மையங்கள் காளான்கள் போல முளைக்கும். படிப்பதற்கு உரிய வசதிகள் செய்து தராமல் தேர்வுகள் வைப்பது மட்டும் எப்படி நியாயம்? என்று பேசினார்.