தற்போதைய நாடாளுமன்ற காலத்தில் அரசியல் தீர்விற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என வடக்கு மாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தை கூட்டமைப்பு பாதுகாக்கின்றது என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ளார்.
தற்போதைய நாடாளுமன்ற காலத்தில் அரசியல் தீர்வு முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் தெற்கு உடைந்து காணப்படுகின்றதென்றும் தெற்கில் ஒருமைப்பாடு வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அத்தோடு ஒவ்வொருவரும் இனவாத கருத்துக்களையே முன்வைக்கின்றனர் என்பதால் அரசியல் தீர்வுக்கு சாத்தியமில்லையென குறிப்பிட்டுள்ளார்.